தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கரோனா தொற்று உறுதி..!

Breaking News

header ads

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கரோனா தொற்று உறுதி..!

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 63 பேருக்கும், விழுப்புரத்தில் 45 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments