டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்..!

Breaking News

header ads

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்..!

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மதுக்கடைகளை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகளை திறக்க கூடாது என்று வலியுறுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகள், மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் வீட்டு வாசலில் 5 பேராக கூடி முழக்கம் எழுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி, இன்று மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் கருப்பு உடையணிந்து, கையில் கருப்பு கொடியேந்தி மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவும், மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து தனது இல்லம் முன்பு கண்டன குரல் எழுப்பினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவனும், மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

Post a Comment

0 Comments