பெட்ரோல்,டீசல் கலால் வரி அதிரடி உயர்வு..!

Breaking News

header ads

பெட்ரோல்,டீசல் கலால் வரி அதிரடி உயர்வு..!

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில்லரை விற்பனை விலை உயராது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதன் காரணமாக அரசுக்கு கிடைக்கும் கூடுதல் நிதியை கொண்டு , ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்யும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், சாலை செஸ்(cess)வரி 8 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று டீசலுக்கு சிறப்பு கூடுதல் கலால் வரியாக 5 ரூபாயும், சாலை செஸ்(cess) வரியாக 8 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது சில்லறை விற்பனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் இது கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிகள் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிதி உட்கட்டமைப்பு மற்றும் நாட்டின் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments