சென்னையில் எளிய முறையில் நடைபெற்ற அமைச்சர் மகன் திருமணம்..!

Breaking News

header ads

சென்னையில் எளிய முறையில் நடைபெற்ற அமைச்சர் மகன் திருமணம்..!

சென்னையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம் அவரது வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் திருமணம் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்நிலையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம்,
சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது.

அமைச்சர் பெஞ்சமினின் இளைய மகன் சாம்சன் பால் மற்றும் ஸ்ரீசாத்திகாவிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம்
நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்னை அயனப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில்
எளிமையாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் மொத்தம் 26 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு, தனி மனித இடைவெளியை
பின்பற்றினர். திருமணத்திற்கு பிறகு மணமக்கள், திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் துய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகளை
வழங்கினர்.

Post a Comment

0 Comments