தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைவு..!

Breaking News

header ads

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைவு..!

தமிழகத்தில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக, எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது.

மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments