டிவியில் சேனல் மாற்றுவது குறித்து தகராறு : வாலிபர் தற்கொலை..!

Breaking News

header ads

டிவியில் சேனல் மாற்றுவது குறித்து தகராறு : வாலிபர் தற்கொலை..!

மீளவிட்டான் பகுதியில் டிவியில் சேனல் மாற்றுவது தொடர்பான தகராறில் தாயார் திட்டியதில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் பொன் இசக்கி (17). கூலி வேலை செய்து வருகின்றார். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் டிவியில் சேனல் மாற்றுவது தொடர்பாக பொன்இசக்கிக்கும் அவரது சகோதரருக்கும் தகராறு ஏற்பட்டது .

இதனால் அவரது தாயார் பொன் இசக்கியை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த பொன் இசக்கி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Post a Comment

0 Comments