தூத்துக்குடியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது? ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்..!

Breaking News

header ads

தூத்துக்குடியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது? ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்  என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், பேட்மாநகரம், கேம்பலாபாத், செய்துங்கநல்லூர், ஆத்தூர், அய்யனாரூத்து, தூத்துக்குடி, தங்கம்மாள்புரம், பசுவந்தனை ஆகிய 9 பகுதிகளை சேர்ந்த 27 பேர் கரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளானார்கள். இந்த 9 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா? என்பதை கேட்டறிந்தனர். சளி, இருமல் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட 25 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக 28 நாட்கள் கண்காணிக்கப்படும். அந்த பகுதியில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் பகுதி முதன்முதலாக மார்ச் மாதம் தனிமைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேட்மாநகரம், காயல்பட்டினம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. இதில் செய்துங்கநல்லூர் பகுதியில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. மற்ற சில பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments