கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்திற்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

Breaking News

header ads

கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்திற்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சென்னையில் குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாய பொருட்களுடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மறிக்க கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் அனைத்துவிதமான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் செயல்பட மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments