மது எங்கே என கேட்ட இளைஞர் ! அறிவுரை கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு..!

Breaking News

header ads

மது எங்கே என கேட்ட இளைஞர் ! அறிவுரை கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு..!

திருப்பூரில் மது எங்கே கிடைக்கும் என கேட்ட இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய கூலித் தொழிலாளி, அந்த இளைஞர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 5ஆம் தேதி தென்னம்பாளையம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கௌதம், சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தன்று மது கிடைக்காமல் சுற்றித் திரிந்த அந்த 6 பேரும் மது எங்கே கிடைக்கும் என வீராவிடம் விசாரிக்க, அவர் இவர்களுக்கு அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments