மகிழ்ச்சி செய்தி ! இனி SWIGGY மூலம் வீடு தேடி வரும் பால்..!

Breaking News

header ads

மகிழ்ச்சி செய்தி ! இனி SWIGGY மூலம் வீடு தேடி வரும் பால்..!

பொதுமக்கள் SWIGGY மூலமாகவும் நேரடியாகப் பால் மற்றும் பால்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நுகர்வோர் இல்லங்களுக்குப் பால் மற்றும் பால்பொருட்கள் வழங்குவதற்காக ZOMATO மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனம் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்து அதைச் சென்னையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து SWIGGY நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இன்றிப் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments