கொரோனா 2020 : உடல் அடக்கம் செய்வதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்..!

Breaking News

header ads

கொரோனா 2020 : உடல் அடக்கம் செய்வதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்..!

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 21 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த தெருக்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் பிரகாஷ், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று கட்டமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments