சென்னையில் ஆளில்லா விமானத்தில் அதிநவீன மென்பொருளை பயன்படுத்தி மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்த கண்காணிப்புப் பணியில் ஆளில்லா குட்டி விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒலிபெருக்கிகளை இணைத்து பல்வேறு அறிவுரைகளையும் விழிப்புணர்வையும் போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை ஐஐடி குழுவின் டேட்டா பிரம் ஸ்கை (data from sky) என்ற மென்பொருளை ஆளில்லா விமானத்தின் கேமராவில் இணைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஆளில்லா விமானம் 20 அடி உயரத்தில் பறந்து, மக்களின் நடமாட்டத்தை கணக்கெடுப்பு செய்கிறது.
ஒருமுறை ஆளில்லா விமானம் ஒரு பகுதியில் பறக்கும் போது சாலையில் எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எத்தனை மக்கள் நடமாடுகிறார்கள் என்கிற கணக்கை துல்லியமாக எடுக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சாலையில் செல்லும் நபர்களின் முகங்களை தெளிவாக படம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் யாரேனும் சாலைகளில் நடமாடுகிறார்களா என்பதையும் போலீசார் கண்காணிக்கின்றனர். வாகனங்களின் எண்களையும் கண்டுபிடிக்கும் வகையில் இந்த மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் வாகனங்களில் செல்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இது உதவுவதாக போலீசார் கூறுகின்றனர். சென்னை கிழக்கு மண்டலம் சார்பில் இந்த மென்பொருள் உள்ளடக்கிய ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments