கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1543 பேருக்கு கொரோனா..!

Breaking News

header ads

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1543 பேருக்கு கொரோனா..!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஆயிரத்து 543 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன்,62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா தொற்று நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 435-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் 934ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 590ஆக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக குஜராத்தும், டெல்லியும் உள்ளன.

குஜராத்தில் 3 ஆயிரத்து 548 பேரும், டெல்லியில் 3 ஆயிரத்து 108 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 21 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெறும் நிலையில், இதுவரை 6 ஆயிரத்து 868 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 282 பேரும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 101 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Post a Comment

0 Comments