தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2020 வாகனங்கள் பறிமுதல்..!

Breaking News

header ads

தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2020 வாகனங்கள் பறிமுதல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள ஒருசில பிரதான சாலைகளைத் தவிர மற்ற சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. குரூஸ் பா்னாந்து சிக்னல், வி.வி.டி. சாலை, தென்பாகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பலமுறை எச்சரித்து தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலைகளில் வாகனங்களில் அடிக்கடி சுற்றித்திரிவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 198 நபர்களை போலீசார் கைது செய்து,96 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4275 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2020 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments