தமிழகத்தில் 144 தடையை மீறியதற்காக இதுவரை 3.45 லட்சம் பேர் கைது..!

Breaking News

header ads

தமிழகத்தில் 144 தடையை மீறியதற்காக இதுவரை 3.45 லட்சம் பேர் கைது..!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலவித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வரை 144 தடையை மீறியது தொடர்பாக 3.26 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3.45 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், 2.93 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 3.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 93,035 இருசக்கர வாகனங்கள், 2,626 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 96,498 வாகனங்கள் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments