கரோனா வைரஸ் பீதி எதிரொலியாக இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் 15பேர் படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 3 படகுகளில் 15பேர் கன்னியாகுமரி அருகே நேற்று இரவு பிடிபட்டனர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டனார்.
இதனிடையே கரோனா வைரஸ் எதிரொலியாக பிடிபட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 15பேரும் படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற் பகுதியில் இலங்கை மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பின்னர் இலங்கை மீனவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

0 Comments