மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் வலுவான மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா நேற்று மாலையிலேயே பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் அந்த முடிவை சிந்தியா ஒத்திவைத்தார்.
இன்று அவர் பாரதிய ஜனதாவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாரதிய ஜனதாவில் எத்தகைய பொறுப்பு வழங்குவது என்பது பற்றி பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஜோதிராதித்ய சிந்தியாவை பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி விரும்புவதாக தெரிய வந்துள்ளது. எனவே இன்று அல்லது நாளை சிந்தியா பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து 3 பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
எனவே இன்று அல்லது நாளை சிந்தியாவை வேட்பாளராக அறிவிப்பது பற்றிய தகவல் வெளியாகலாம். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் மாநிலங்களவை எம்.பி.க்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

0 Comments