மதுரையில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி, 60 பேருடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார் என்றும், அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று திரும்பிய 439 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, 3 பேர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் கடந்த டிசம்பர் மாதம் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில், அண்மையில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் இணைந்து வெளியில் சென்று வந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும், மதுரை ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

0 Comments