இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பான விசாரணையில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த மாதம் 19ம் தேதி கிரேன் விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தாம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், விபத்து குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை இன்று பிற்பகல் விசாரிக்க நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

0 Comments