ஒரே நாளில் ரூ.584 தங்கம் விலை குறைவு !

Breaking News

header ads

ஒரே நாளில் ரூ.584 தங்கம் விலை குறைவு !

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் குறைந்துள்ளது.

33 ஆயிரம் ரூபாயையும் கடந்து உச்சத்தில் விற்பனையாகி வந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. அந்தவகையில் தொடர்ந்து 6வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 3,943 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 73 ரூபாய் குறைந்து 3870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 31 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 584 ரூபாய் விலை குறைந்து 30 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது. பார்வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 800 ரூபாய் விலை குறைந்து 39 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments