தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது - ஒரு சவரன் விலை ரூ.33,472 ஆக விற்பனை
தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி வருகிறது.
நேற்று சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள வரையில், தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிகழ்வதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments