தூத்துக்குடி துறைமுக ஊழியர் ஒருவர் தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என சந்தேகப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 7,988 பேர் உயிரிழந்துள்ளனர்.1,98,513 பேருக்கு கரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய-மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 58 வயதான துறைமுக ஊழியர் ஒருவர் தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் துறைமுகசபை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மூக்கிலிருந்து வரும் திரவத்தில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி உள்ளனர்.
தற்போது அவருக்கு எந்த விதமான காய்ச்சலும் சளி இருமல் போன்ற எவ்விதமான அறிகுறிகளும் இல்லாத நிலையில், இரண்டு மாதங்களாக அசாமில் பணியாற்றிவிட்டு கடந்த 15ஆம் தேதி ஊர் திரும்பியுள்ளார். இதனால் தனக்கு கரோனா வைரஸ் இருக்கலாம் என வந்த சந்தேகத்தின் பெயரில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள, அவரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதனால் தூத்துக்குடி தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

0 Comments