நடிகர் அஜித்குமார் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் பரவிவரும் கடிதம் போலியானது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், 6ம் தேதி அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு, அதில் போலி கையொப்பம் இணைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருக்கும் கருத்துகள் அனைத்தையும் அஜித் மறுப்பதாகவும், ஏற்கெனவே அறிவித்தது போல சமூகஊடகங்களில் கணக்குகள் இல்லை, இணையவும் விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments