சேலம் அருகே கணவன் மனைவி உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை !

Breaking News

header ads

சேலம் அருகே கணவன் மனைவி உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை !

சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலைகிரி அடுத்துள்ள செம்மண்திட்டு பகுதியை சேர்ந்தவர் வெள்ளிபட்டறை அதிபர் தங்கராஜ்.இவரிடம் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா மற்றும் சன்னி  ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் தங்கராஜூவுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு 9 மணி அளவில் ஆகாஷ் வீட்டில் குழந்தை அழும் சப்த த்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வந்தனா, சன்னி மற்றும் ஆகாஷ் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த விரைந்து வந்த இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க காவல்துறையினர்தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments