தமிழ்நாட்டில் மூன்றாவதாக ஒரு நபருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து கடந்த 17ஆம் தேதி சென்னை வந்த அந்த 21 வயது மாணவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் கல்வி பயின்று வருகிறார். கடந்த 17ஆம் தேதி விமானத்தின் மூலம் சென்னை வந்திறங்கிய அவருக்கு, விமான நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அந்த இளைஞர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த இளைஞருக்கு நேற்று கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அந்த இளைஞரின் ரத்தம், சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், கொரோனா தொற்று இன்று உறுதியாகியிருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேருமே, வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், தீவிர கண்காணிப்பின் மூலமே அவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளார். அதற்கும் முன்னதாக, ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

0 Comments