தமிழகம் புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் பாஸ் !

Breaking News

header ads

தமிழகம் புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் பாஸ் !

கொரோனா அச்சம் காரணமாக பள்ளி இறுதித்தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகி உள்ளதால், தமிழகத்தில்  1 முதல் 9 - வது வகுப்பு வரை, அனைத்து மாணவ - மாணவிகளும் பாஸ் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத் தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின், வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஆல் பாஸ் குறித்து, பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 24 ம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ்- டூ மாணவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

டீ  கடை களில் தேவை இல்லாமல் கூட்டம் சேருவதை தடுக்க, இன்று மாலையில் இருந்து மறு உத்தரவு  வரும் வரை, தமிழ்நாடு முழுவதும் டீ கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 ஊரடங்கு உத்தரவால் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவின் உத்தரவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவ - மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments