தூத்துக்குடி அருகே பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை :கடைகள் அடைப்பு !

Breaking News

header ads

தூத்துக்குடி அருகே பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை :கடைகள் அடைப்பு !


தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் பதட்டம் ஏற்பட்டு அங்கு கடைகள் அடைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கே. ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகையா மகன் அழகுராஜ் (36). இவர் அங்கு பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். பக்கத்து ஊரான கரட்டு மலை பகுதியை சேர்ந்த பொன்னுப்பாண்டி மகன் மகேந்திரன் (28). இவர் கே. ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த பெண் வீட்டிற்கு அடிக்கடி மகேந்திரன் வந்து சென்றதை அழகுராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகேந்திரனை அழகுராஜ் கம்பால் தாக்கினாராம்.இது சம்பந்தமாக பாேலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அழகுராஜ் கழுகுமலையிலுள்ள, ஒரு கடையில் தனது கடைக்கு தேவையான பலசரக்கு பொருட்களை வாங்கி கொண்டிருந்தாராம். அப்போது அங்கே வந்த மகேந்திரன், அழகுராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே அழகுராஜ் இறந்தார். உடனே மகேந்திரன், கையில் அரிவாளுடன் சென்று கழுகுமலை போலீசில் சரண் அடைந்தார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இறந்தவர் உடலை பாளை.,ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பட்டபகலில் பஜாரில் நடைபெற்ற காெலையால் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதனிடையே அழகுராஜ் கொலை சம்பவம் ஆலங்குளம் கிராம மக்களுக்கு தெரிய வரவே கிராம மக்கள் கழுகுமலைக்கு திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். பொதுமக்கள் வருவதை அறிந்த போலீசார் சரண் அடைந்த மகேந்திரனை, வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இது குறித்து பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். இருப்பினும் கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments