தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் தகவல்

Breaking News

header ads

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ப்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 03.03.2020 செவ்வாய்கிழமை (மாசி மாதம் 20ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் 03.03.2020 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணிச் முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.03.2020 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments