திருச்செந்தூர் பேரூராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண் டும் என ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக அம்மாபேரவை செயலாளர் ராம்கோபால் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு , ராம்கோபால் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. திருக் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனை,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளும்,நிறுவனங்களும் உள்ளன.100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் என்று பல்வேறு வசதிகள் இருந்தும் பேரூராட்சிகள் பணிகள் இவற்றிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பேரூராட்சிக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.ஆனாலும் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படும் அவலநிலை உள்ளது.
எனவே திருச்செந்தூர், ஆறுமுகநேரி, கானம் ஆகிய பேரூராட்சி பகுதிகளையும், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளையும், காயல்பட்டணம் நகராட்சி பகுதியையும் இணைத்து திருச்செந்தூர் மாநகராட்சியாக அறிவிக்குமாறு வேண்டுகிறேன். திருச்செந்தூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டால் புண்ணிய ஸ்தலமான திருச்செந்தூர் சிறப்பான நிலை அடைந்து வளர்ச்சி பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments