பொதுத்தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால் 5 ஆண்டு கால தண்டனை !

Breaking News

header ads

பொதுத்தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால் 5 ஆண்டு கால தண்டனை !


தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு, அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments