ரெயிலில் மோதி தொழிலாளி பலி- போலீஸ் விசாரணை

Breaking News

header ads

ரெயிலில் மோதி தொழிலாளி பலி- போலீஸ் விசாரணை


திருச்சி ஸ்ரீரங்கம் உத்தமர் கோவில் அருகே இன்று காலை ரெயில் மோதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் சிதறி பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியவில்லை. ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுபற்றி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments