எவ்வித சிகிச்சையுமின்றி கொரோனாவிலிருந்து குணமடைந்த பச்சிளம் குழந்தை

Breaking News

header ads

எவ்வித சிகிச்சையுமின்றி கொரோனாவிலிருந்து குணமடைந்த பச்சிளம் குழந்தை


கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களேயான பச்சிளம் குழந்தை எவ்வித சிகிச்சையுமின்றி தானாக குணமடைந்த அதிசயம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

ஊகானில் கொரானா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5ம் தேதி அழகான பெண்குழந்தை பிறந்தது. உடனடியாக குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரானா பரவியிருந்ததை கண்டுபிடித்தனர்.

சியோசியோ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 17 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, எவ்வித சிகிச்சையுமின்றி பூரணமாக குணமடைந்துளது.

Post a Comment

0 Comments