தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த சுப்புலட்சுமிக்கு 11 வாக்குகளும், திமுகவை சேர்ந்த மருதகனிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. எனவே சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அது போல் புதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த திருச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கயத்தார் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தேர்தலலில் அமமுகவை சேர்ந்த மீரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவில்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த காசிவிசுவநாதன் 12 வாக்குகளும், சுயேச்சை உறுப்பினர் கரிமால் அழகு 10 வாக்குகளும் பெற்றனர். ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் தோல்வியுற்ற திமுக ஒன்றிய செயலாளர்(கிழக்கு) காசி விஸ்வநாதன் துணைத் தலைவர் தேர்தலில் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணைதலைவராக திமுகவை சேர்ந்த கோயில்மணி வெற்றி பெற்றுள்ளார்.



0 Comments