இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை !

Breaking News

header ads

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை !


இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்ட ரோகித் சர்மா தற்போது அணிக்கு திரும்பியுள்ளதால், ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பும்ரா, ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்கக்ப்படுகிறது.

அதே போன்று பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின்பு ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் அந்த அணியின் பேட்டிங் பலமடைந்துள்ளது.

ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், சாம்பா (STARC , CUMMINS, HAZLEWOD, ZAMPA) போன்ற பந்து வீச்சாளர்கள் இந்திய அணி வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments