வடக்கு அயர்லாந்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துள்ளனர்.
வடக்கு அயர்லாந்தை ப்ரண்டன் என்று பெயரிடப்பட்ட சூறைக்காற்று தாக்கியது. இதன் காரணமாக கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பலத்த காற்று வீசிவருவதால் வடக்கு அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாக கேரிக்பெர்கஸ் என்ற இடத்தில் கடலரிப்புத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.



0 Comments