7 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை : இன்று ரூ.536 குறைப்பு !

Breaking News

header ads

7 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை : இன்று ரூ.536 குறைப்பு !


இதுவரை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 536 ரூபாய் குறைந்து சவரன் 30 ஆயிரத்து 640 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 380 ரூபாயாக உள்ளது.

24 கேரட் தங்கத்தின் விலை  70 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 22 ரூபாயாக விற்பனையாகிறது.இதனிடையே இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன.

அமெரிக்கா ஈரான் இடையே நிலவிய பதற்றம் குறைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 318 ஆக வர்த்தகம் ஆனது.

தேசிய பங்குசந்தை நிப்டி 151.80 புள்ளிகள் அதிகரித்து  12 ஆயிரத்து 150 புள்ளிகளை கடந்தது. எஸ்.பி.ஐ., இந்தஸ்இந்த் வங்கி, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி,.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி, ஏசியன் பெயின்ட், ரிலையன்ஸ் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

டி.சி.எஸ்., பிரிட்டானியா பங்குகள் சிறிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 43 காசுகளாக உள்ளது

Post a Comment

0 Comments