மீண்டும் தங்கம் விலை கிடுகிடு உயர்வு !

Breaking News

header ads

மீண்டும் தங்கம் விலை கிடுகிடு உயர்வு !


சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 3800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 20 ரூபாய் உயர்ந்து 3820 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று நேற்று 30,400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 160 ரூபாய் உயர்ந்து 30,560 ரூபாய்க்கு விற்பனையானது.

இதே போன்று நேற்று 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து 50 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது.

நேற்று 50,100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, 500 ரூபாய் விலை உயர்ந்து 50,600 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்றத்தால் சென்னையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும், இந்த விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments