*மார்கழி- 25*
*ஜனவரி*
*10.01.2020*
*வெள்ளிக்கிழமை*
*🇮🇳🔎ராசி பலன்கள்🔍🇮🇳*
*⚜️மேஷம் ராசி*
வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். மின்சாரம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக செயல்படவும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : காரியங்கள் நிறைவேறும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
*⚜️ரிஷபம் ராசி*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நபர்களின் நட்பால் புத்துணர்ச்சி உண்டாகும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார மேம்பாட்டிற்கான ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : புத்துணர்ச்சி உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
*⚜️மிதுனம் ராசி*
உடல் தோற்றப்பொலிவு மேம்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில செயல்களை முடிக்க அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : தோற்றப்பொலிவு மேம்படும்.
திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
*⚜️கடகம் ராசி*
புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
*⚜️சிம்மம் ராசி*
எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட பணிகளை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.
*⚜️கன்னி ராசி*
விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.. தொழில் திறமைகளின் மூலம் செல்வாக்கு உயரும். தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின்வழி சுபச்செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.
சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
*⚜️துலாம் ராசி*
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : செல்வாக்கு உயரும்.
சுவாதி : சிக்கல்கள் குறையும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
*⚜️விருச்சகம் ராசி*
பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கருப்பு
விசாகம் : கவலைகள் தோன்றும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : தலையீட்டை தவிர்க்கவும்.
*⚜️தனுசு ராசி*
குடும்பத்தில் பொருளாதார மேன்மைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான செய்திகளில் சுபபலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
*⚜️மகரம் ராசி*
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வீண் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : வெற்றி அடைவீர்கள்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
*⚜️கும்பம் ராசி*
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். குலதெய்வ வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
சதயம் : பயணங்கள் சாதகமாகும்.
பூரட்டாதி : நன்மை உண்டாகும்.
*⚜️மீனம் ராசி*
கால்நடைகளால் ஏற்பட்ட இலாபத்தினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவுகளால் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : ஆதரவு உண்டாகும்.















0 Comments