வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் !

Breaking News

header ads

வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் !



தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்திருந்தார்.அதன்படி,  வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய பெயர், பிறந்த தேதி , முகவரி ஆகிய மாற்றங்களை  வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

அதே போல புதிய வாக்காளர்கள் படிவம் 6 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் புதிய பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் www.nsvp.in என்ற இணையதளம் மூலமும் அதோடு Voters Helpline என்ற ஆப் மூலம்  உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம், இந்த சிறப்பு முகாமிற்கு பிறகு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Post a Comment

0 Comments