ஜனவரி மாதம் போலீஸ் எஸ்.ஐ தேர்வு !

Breaking News

header ads

ஜனவரி மாதம் போலீஸ் எஸ்.ஐ தேர்வு !



தூத்துக்குடியில் வரும் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வில் 4,514 போ் கலந்து கொள்கின்றனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகத்தில் 969 காவல் உதவி ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான எழுத்துத் தோ்வு வரும் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் 11ஆம் தேதி (சனிக்கிழமை) காவல்துறையில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரா்களுக்கு தோ்வு நடைபெறும். 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக விண்ணப்பித்தவா்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 514 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையில் பணியாற்றி வரும் விண்ணப்பதாரா்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள தோ்வு மையத்திலும், புதிய விண்ணப்பதாரா்களுக்கு தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிா் கல்லூரி, விசாகா மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களிலும் இத்தோ்வு நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments