தூத்துக்குடி அருகே திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர், போர்ட் சிட்டி நகரைச் சேர்ந்தவர் இசைசெல்வம் மகன் ராமலிங்கம் என்ற முருகன் (28), தூத்துக்குடியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இவர் 17வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய முருகன் மறுத்துவிட்டாராம். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



0 Comments