உள்ளாட்சி தேர்தல் பகை - விஷம் கொடுத்து கொலை : இருவர் கைது !

Breaking News

header ads

உள்ளாட்சி தேர்தல் பகை - விஷம் கொடுத்து கொலை : இருவர் கைது !


நாமக்கல் அருகே தேர்தல் விரோதம் காரணமாக மதுவில் விஷம் கலந்து கொடுத்து  அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த இருக்கூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினர் தேர்தலில், தங்களது மனைவியை போட்டியிட வைப்பது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும், அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த தேர்தலில் செந்தில்குமாரின் மனைவி வார்டு உறுப்பினராக தேர்வானதால், ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகமும், அவரது நண்பரும், செந்தில்குமாரையும் அவரது நண்பரையும் மது குடிக்க அழைத்துள்ளனர்.

அப்போது, மதுவில் விஷம் கலந்து கொடுத்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் குமார், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விரோதம் காரணமாக நிகழ்ந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments