அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது :ஜெயக்குமார் கருத்து !

Breaking News

header ads

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது :ஜெயக்குமார் கருத்து !



அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆகிய 5 அமைச்சர்கள், நிதி, சட்டம் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் அரசு முடிவெடுக்கும் என்றார்.

Post a Comment

0 Comments