ஆபாசப் படங்களை பகிர்ந்த விவகாரத்தில் 2 பேர் கைது !

Breaking News

header ads

ஆபாசப் படங்களை பகிர்ந்த விவகாரத்தில் 2 பேர் கைது !


பொள்ளாச்சி அருகே  முகநூலில் ஆபாச படங்கள் பகிர்ந்த அஸ்ஸாம் மாநில இளைஞன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

குமார் என்கிற ரெண்தா பாசுமாடரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளான். இதனிடையே கோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது, குமாரின் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்கள் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குமாரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பலருக்கும் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளான்.

இதனிடையே, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கல்லூரியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் இவன், தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவிட்டது தெரிய வந்தது.

Post a Comment

0 Comments