இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டா கிளாஸ்)போல வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் . உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பண்டிகையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மகிழ்விக்க பலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சர்ப்ரைஸ் பரிசுகள் அளிப்பர்.
அந்த வகையில் சிவப்பு நிற உடை, வெண் தாடி, மூக்குக்கண்ணாடி ஆகியவற்றை அணிந்து, கிறிஸ்துமஸ் தாத்தா போல உருமாறிய பிரபல கிரிக்கெட் வீரர் கோலி, கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு சர்ப்ரைஸ் விசிட்டாக சென்றார்.
குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்த கோலி முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தங்களிடம் பேசியது கோலி என்று தெரிந்ததும், அங்கு குழுமி இருந்த குழந்தைகள் உற்சாகமாகினர்.
ஆர்வமுடன் ஓடி வந்தது அவரை கட்டி பிடித்து கொண்டு ஆசையாக பேசினர். குழந்தைகளுடன் தனது அன்பை பகிர்ந்துகொண்ட கோலி, அவர்களுக்கு விதவிதமான பரிசு பொருட்களையும் வழங்கி மகிழ்வித்தார்.



0 Comments