புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தால், ஏராளமான ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே வேலை பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசுகளை வீச, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பெப்பர் ஸ்பிரே அடித்ததுடன், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.



0 Comments