டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், 73 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் தொடங்கி உள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், 23 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்து 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது.
இந்தியாவைச் முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே 134வது மற்றும் 136வது இன்னிங்ஸ்களில் 7,000 ரன்கள் கடந்தனர்.



0 Comments