குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தவறு - சரத்குமார்

Breaking News

header ads

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தவறு - சரத்குமார்



தற்போது இந்தியாவில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலின் காரணமாகவே  நடைபெறுகிறது என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூகங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு கலவரம் வெடிக்கிறது. புரிதல் இல்லாத காரணத்தினால் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர். சட்ட திருத்தம் குறித்து மாணவர்களும் தெரிந்துகொண்டு புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே இது போன்ற போராட்டங்கள் அதிகம் நடத்தப்படுகிறது. வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்கலாம் என்று அங்குள்ள எதிர்கட்சிகள் செயல்படுகின்றன என கூறினார்.

Post a Comment

0 Comments