குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தது கூட்டணி தர்மம் - ராமதாஸ்

Breaking News

header ads

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தது கூட்டணி தர்மம் - ராமதாஸ்



 குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததற்கு கூட்டணி தர்மம் ஒன்றே காரணம் என  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மேற்கண்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு பாமக ஆதரவு அளித்தது குறித்து ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி என்றால் ஆதரித்து தான் ஆக வேண்டும். பா ம.கவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை.

நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை என்றும் ராமதாஸ் பதிலளித்தார்.

Post a Comment

0 Comments