ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற இந்தியன் சைபர் காங்கிரஸ் அமைப்பின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான ஆபாச படத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருக்கின்ற ஆபாச தளங்களை முடக்குவது குறித்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழகத்தில் மாவட்டம்தோறும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருவது போன்று சைபர் கிரைம் குற்றங்களுக்கான நீதிமன்றங்கள் எதிர்காலத்தில் அமைவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.



0 Comments